குளத்துப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம், சென்னையை சேர்ந்த கோகுல், திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஏப்ரல்.25ம் தேதி அன்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...