கோவை ஆர்.எஸ்.புரத்தில் பைனான்ஸ் தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பைனான்ஸ் தொழிலதிபரிடம் 1200 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஏப்ரல்.26 தனது நண்பர் ஒருவரை பார்க்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1200ஐ பறித்து தப்பி செல்ல முயன்றார்.

பின் கார்த்திகேயனின் சத்தம் கேட்டு அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ‘‘நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி’’ என கூறி அந்த வாலிபர் தப்பி சென்றார். இது குறித்து கார்த்திகேயன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணம் பறித்தது கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ்(34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...