தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் ஐடிஐ கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் தகவல் கூறியதை தொடர்ந்து இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராம்பாலி என்பவரது மகன் தேவேஷ் ராஜக் வயது 32 என்பதும், மற்றொருவர் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரது மகன் யாசர் ஆர்பத் வயது 20 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...