கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்காக நான்கு பேர் இன்று தனிப்படை முன் ஆஜர்

கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ரமேஷ், காய்கறிகள் வாங்கி கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் காருக்கு நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.


கோவை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24-ஆம்தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் கொள்ளை போயின. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும்போது விபத்திற்குள்ளாகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம்தேதி தற்கொலை செய்தார். 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு காவலாளி கொலை வழக்கு 10 பேர் மீது பதிவு செய்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று கோடநாடு கொலை வழக்கு விசாரணையில் மேலும் நான்கு பேருக்கு சமன் வழங்கப்பட்டது. கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ரமேஷ், காய்கறிகள் வாங்கி கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார், மற்றும் காருக்கு நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேரையும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு நான்கு பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10:30 மணி அளவில் 4 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். இந்த நான்கு பேர் மீதும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...