டாட்டா பவர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் டாட்டா பவர் நிறுவனம் தென்னிலை, பரமத்தி ஆகிய பகுதிகளில் 300க்கு மேற்பட்ட காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை கொண்டு வந்து மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தூரம்பாடிக்கு உயர்மின் கோபுரத்தை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறது.



இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது விவசாய நிலத்தின் மதிப்பு முழுமையாக பறிக்கப்படும், நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்படுவதால் தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு DTCP, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார முகமைகளிலும் எவ்வித அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த பணியை கண்டித்து கடந்த 15-04-2024 நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தின் போது நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விதமான அனுமதிகளையும் பெறாமல் பணிகள் தொடங்கப்படாது என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி தற்போது சட்டவிரோதமாக PAP ஆயக்கட்டு விவசாய நிலத்தில், விவசாயம் அல்லாத பயன்பாடான தொழில் சார்ந்த பணிகளுக்கு, இரும்புகளை கொண்டு வந்து சேகரித்து வைக்கவும், கட்டுமானத்திற்கு தகுந்தார் போல் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்திட கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து விவசாயிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர் போராளிகள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...