போளுவாம்பட்டி வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

போளுவாம்பட்டி காப்புக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணியின் போது, சுமார் 45 வயதான ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


Coimbatore: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நடுக்காட்டில் இன்று வரையாடு கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட்டபோது, ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த சடலத்தை மீட்ட பின்னர், காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சடலம் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவருடையது என அறியப்படுகிறது.


தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...