திருப்பூரில் சமத்துவ கும்மியாட்ட விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பு

நொய்யல் நதியை பாதுகாக்கும் நோக்கத்துடன், முத்தையன் கோவிலில் நடைபெற்ற சமத்துவ கும்மியாட்ட விழாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஆடினர்.


திருப்பூர்: கொங்கு மண்டலம் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்றது. இதில் இதில் மிக முக்கியமாக கும்மியாட்டம் இருந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் கொங்கு பகுதிகளுக்கு பெயர் பெற்ற கும்மி நடனம் ஆடுவது பலரையும் கவர்ந்து வருகிறது. இதுபோல் பலரும் இந்த கும்மியாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில்,திருப்பூரில் வேலவன் கும்மி ஆய்வு மையம் சார்பில், நொய்யல் நதியை பாதுகாக்கவும், நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து இயற்கையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்சமத்துவ கும்மி அரங்கேற்ற விழா திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் நடந்தது.



இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் கவரும் வகையிலான ஒரே வண்ணத்திலான உடையணிந்து, உற்சாகமாக கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆடினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...