கோவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று - சில இடங்களில் லேசான மழை

இன்று மாலையில் கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசியது. செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (04-05-2024) அக்னி நட்சத்திர வெயில் காலையிலிருந்து மதியம் வரை வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்துக்கு பிறகு வெயிலானது சற்று தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இன்று மாலை திடீரென்று வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீச தொடங்கியது. கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் புழுதி காற்றுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசியது.செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும் கோவையின் பெரும்பாலான இடங்களில் இன்று மே.4 பலத்த காற்று மட்டுமே வீசியது. இதன் காரணமாக கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...