பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்களில் சார் ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு

முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.


கோவை: ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.



அதன்படி இன்று பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 372 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.



மேலும் திடீரென பள்ளி வாகனங்களில் தீ பிடித்தால் உடனடியாக தீயை அணைப்பது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கவும் அளிக்கப்பட்டது.



அரசு உத்தரவுப்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மூலம் வாகனங்கள் இயக்கபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு அதை மீண்டும் சரி செய்து பின்னரே இயக்க அனுமதிக்கப்படும் என்று ஆய்வு செய்த பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...