திமுக அரசின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இனிப்புகள் வழங்கிய கோவை திமுகவினர்

திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூரில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளனர்.


கோவை: திமுக அரசின் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, இன்று மே.7 அன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்நிகழ்வுக்கு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில் மற்றும் சிங்கை பகுதி -2 திமுக செயலாளர் சிங்கை மு. சிவா ஆகியோர் உட்பட பல்வேறு திமுக நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.



பெரும் திரளானோரின் பங்கேற்பில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...