பீளமேட்டில் மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இளைஞர் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


கோவை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை மதிமுக கட்சியினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (மே.8) பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலையில், இளைஞர் அணி சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...