ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவிற்கு கற்பக கல்வி நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.



கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



13 மாணவர்கள் 31 பதக்கங்களை பெற்றனர்.



இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவர் டாக்டர் அருண், கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...