உடுமலையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் 250 கிலோ பறிமுதல்

உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் நடத்திய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்திரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படியும் உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் உடுமலை நகரப் பகுதியில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது மாம்பழம் மொத்தமாக மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளில் மாம்பழங்கள் செயற்கையாக ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ எடையுள்ள அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.



கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்ணும் பழமாக மாம்பழம் இருப்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.



மேலும் ரசாயன முறையில் செயற்கையாக மாம்பழங்களை பழக்க வைத்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...