கோவையில் பழைய பஸ்கள் நிறுத்தப்படும்; புதிய பேருந்துகள் அறிமுகம்

அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் லாவெண்டர் நிறத்தில் இருக்கும். எனவும் அதில் மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் என அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்படும் 

கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன என தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர, கோவை மண்டலத்தில் கூடுதலாக 26 நகர பேருந்துகள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு தற்போது 6 புதிய லாவெண்டர்நிற பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது எனவும், இது மகளிர் இலவச பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு அடுத்து அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் இதே நிறத்தில் இருக்கும். எனவும் அதில் "மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை " என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...