உடுமலை அருகே அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு - பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மோட்டார் வைத்து தொழிலதிபர்கள் திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதுபோக தென்னை, வாழை, கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் ஆயிரம் கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.



இதற்கு இடையில் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கு மோட்டார் வைத்து திருடுவதால் கீழ் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுனர்.



பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தண்ணீர் திருடும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிப்பதாகவும், உடனடியாக அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக பதிக்கப்பட்டுள்ள பைப் லைன்கள், மின்மோட்டார்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தபட்டது.

இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு நாளை மறுநாள் அமராவதி அணையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...