கனமழையால் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவையில் கோடை மழை இன்று (மே.18) வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தது. அதன்படி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே விழுந்தது. இந்த நிழற்குடை கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் சரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...