கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - ஆனைமலை, மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனமழை அதிகம் பெய்யக்கூடும் என்பதை கணித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் துணை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஆனைமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிதவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு, லைப் பாய், லைப் ஜாக்கெட், மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் வெள்ளத்தை உடனே அகற்றுவதற்காக நவீன மோட்டார், ஜெனரேட்டர், மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பவர் ஷா என 43 வகையான உபகரணங்களுடன் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் தற்போது (மே.20) உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ரப்பர் படகு மற்றும் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்பது, ஊட்டி மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் மண்சரிவு காரணமாக சாலையின் குறுக்கே விழும் மரங்களை நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, போக்குவரத்தை சீர் செய்வது, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்பது உட்பட பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மழை பாதிப்பு சம்மந்தமான தொடர்புக்கு பேரிடர் மேலாண்மை உதவி எண் 1077ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...