உதகையில் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு

126வது மலர் கண்காட்சி ஊட்டியில் தொடங்கியது, சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் மே 26 வரை நீட்டிப்பட்டுள்ளது. டிஸ்னி வேல்டு, மலை ரெயில் உள்ளிட்ட அலங்காரங்கள் கண்டுகளிக்க மக்கள் வருகை தருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே.10 அன்று தொடங்கியது.



இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்கள் கொண்டு மலை ரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள் மற்றும் மலர் அலங்காரங்கள் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அழகிய கண்காட்சியை பார்க்கவும், ரசிக்கவும் வருகை புரிந்தனர்.



இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைய வேண்டிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இதனை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்க தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 126வது மலர் கண்காட்சி மே.26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...