ஈசா யோகா மின் மயானத்திற்கு எதிர்ப்பு - கோவை ஆட்சியரிடம் பெரியார் அம்பேத்கர் இயக்கத்தினர் மனு

ஈசாவின் மின் மயான அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். எதிர்ப்பையும் மீறி மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று பெரியார் அம்பேத்கர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈசா யோகா சார்பில் அமைய உள்ள மின் மயானத்திற்கு தடை விதிக்க கோரி பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு இன்று மே.21 அளித்துள்ளனர். கோவையில் பல்வேறு பகுதியில் ஈசா மையத்தின் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதலாக மின் மயானங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் செம்மேடு பகுதியில் ஈசா யோகா நிறுவனம் சார்பில் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரவிகுமார் கூறுகையில், அப்பகுதியில் ஏற்கனவே சுடுகாடும், இடுகாடும் இருப்பதாகவும், மேலும் ஈசாவில் மர்ம மரணங்கள் தொடர்வதாகவும், இது குறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் வேண்டுமென்றே மின் மயானம் அமைய உள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே மாவட்ட நிர்வாகம் ஈசாவின் மின் மயான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அங்கு ஈசாவின் மின் மயானம் அமைந்தால் அனைத்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...