கோவையில் அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி மற்றும் கோபி செல்லும் அரசு பேருந்துகளில் மேற்கூறையின் கீழ் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.



இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரி செட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.



பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர்.



அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகளிடையே வியப்படையச் செய்தது.



அதேபோன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபி செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரையிலிருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றவாறு பயணம் செய்தனர். மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததன் காரணமாக மழை நீர் வழிந்ததை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பயணம் செய்தனர்.

மழைக்காலங்களில் இவ்வாறு அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் கடும் அவதிக்குள்ளாவதாக சக பயணிகள் கடிந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...