உடுமலை அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டம்

இரண்டரை ஆண்டுகளாக மாதம் 800 ரூபாய் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி, தங்களது பெயரில் இல்லை. ஒப்பந்த நிறுவனம் வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்துள்ளதா? என்று தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் துப்புரவு பணிக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மூன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுதுதனியார்நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வருகின்றனர். புதிய ஒப்பந்தத்தில் பணியில் சேர்ந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இவரது ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் உள்ளது.



இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவர்களது ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியாக ரூ.800 மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது அந்த வருங்கால வைப்பு நிதி கணக்கில் இவர்கள் பெயரில் எந்த பணமும் இல்லை. அந்த நிறுவனம் இவர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்பு நிதி கணக்கில் கட்டியதா? அல்லது கட்டாமல் கையாடல் செய்துள்ளதா? என தெரியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே தங்களுக்கு நியாயமான முறையில் சேர வேண்டியவருங்கால வைப்பு நிதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இவர்களது விஷயத்தில் தலையிட்டு இவர்களுக்கு சேர வேண்டியவருங்கால வைப்பு நிதி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலகட்டத்திலும் உயிரை பணயம் வைத்து விடுப்பு எடுக்காமல் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றினர். தங்களது கோரிக்கையை ஏற்க அரசு மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முன் வருவதில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...