ராஜஸ்தான் மாணவர் செயற்பாட்டாளர் படுகொலைக்கு நீதி கேட்டு கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

னைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதிக்கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் கடந்த 15.05.2024ஆம் தேதி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவர் பெருமன்ற தோழர்களும், ஊர் மக்களும் ஆரம்பத்திலிருந்தே இது கொலை என்று கூறிவந்த நிலையில் காவல்துறையினர் விபத்து என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தோழர் ககன்தீப் சிங்கை திட்டமிட்டு தலையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ககன்தீப் சிங் உடலில் விபத்திற்கான வேறு எந்த காயங்களும் இல்லை. தோழர் ககன்தீப் சீங் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் ககன்தீப் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு மாணவர் செயற்பாட்டாளர். மாணவர் போராட்டங்களில் முன்னணியில் இருந்தவர்.



ஞானஜோதி கல்லூரியை அரசு கையகப்படுத்தியதில் இவரது பங்களிப்பு மகத்தானது. ககன்தீப் சிங் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் வே.வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் பெருமன்ற முன்னாள் மாநிலத் தலைவர் குணசேகர், மாநில துணைத் தலைவர் சினேகா, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் என்.ஜீவானந்தம், எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...