மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வால்பாறையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மே மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மழையும் அதிகமாக பெய்து வருகிறது.

இந்த மழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, சின்னகல்லார் நீர்வீழ்ச்சி, கருமலை ஆறு மற்றும் கெஜமுடி ஆறு, ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழும் இடமாக கூழாங்கள் ஆறு உள்ளது.

இந்நிலையில் மழை சமயங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் தண்ணீரில் தத்தளிக்கும் சிறுவனை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் காப்பற்றி வருவதும், நீரில் மூழ்கிய நிலையில் சிறுவனை காப்பாற்றி வருவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்பு சுற்றுலா பயணிகளுக்கு மழைக்காலங்களில் ஆற்றில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில் தீயணைப்பு துறையினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...