புலியகுளம் பகுதியில் குழியாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

அரைஅடி ஆழத்திற்கு குழியாக இருந்த சாலையில் ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உள்ளிட்ட காவலர்கள் சரி செய்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதி சாலை அரை அடி ஆழத்திற்கு குழியாக இருந்துள்ளது. இந்தசாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் இன்று (மே.24) அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அழைத்து வந்து அரை அடி பள்ளத்தில் அதனை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை சரி செய்தனர். கோவை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உடன் கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகிய காவலர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...