கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் செ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில், 28.05.2024 இன்று 4.00 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஞா.சிவக்குமார், E.M.S.ரபிதீன், சா.தினேஷ்குமார், ச.சரண்யா, ரா.மனோஜ்குமார் அனைவரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

தலைவர் முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவை தொகுதி வாரியாக இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நோட்டு புத்தகங்கள் வழங்குவது.

தீர்மானம் 2:

ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் மாணவர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர் இறுதி பட்டியல் தயாரிப்பது.

தீர்மானம் 3:

வரும் கல்வியாண்டில் கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் ”தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்த்து, நிர்வாகிகளை நிர்வகிக்கும் பணியினை விரைவாக துவக்கிட மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டியில், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் பரிசு பெற்ற நான்கு நபர்களை அழைத்து செல்வது.

தீர்மானம் 5:

நடப்பாண்டிற்கான முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவிற்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை மீண்டும் ஜூலை மாதத்தில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம் 6:

கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7:

மாணவர் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாநில மாணவர் அணி செயலாளர் CVMP.எழிலரசன், MLA அவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள், மாநில இணைச் செயலாளர் S.மோகன் அவர்கள், மாநில துணைச் செயலாளர் கா.பொன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...