குண்டடம் அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி பலி - 3 பேர் மீது வழக்கு

நல்லூரில் முள்புதர்களை அகற்றி தோட்டத்தில் போட்டது தொடர்பான தகராறில் சண்முகம் என்பவரின் குடும்பத்தினர் பழனிசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அருகே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமிகவுண்டர். இவரது மகன் பழனிசாமி(58). விவசாயியான இவரின் நிலத்தில் நேற்று, மதியம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம்(35) என்பவர் முற்புதர்களை அகற்றி போட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு வந்த பழனிசாமி, எனது நிலத்தில் ஏன் முற்செடிகளை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதே நேரம் அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி, தாய் வள்ளியாத்தாள்(55) ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறு செய்துள்ளனர். தகராறு கைகலப்பாக மாறவே இரு தரப்புக்‌கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டு பழனிசாமியை சண்முகம் தரப்பினர் தடியைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் பழனிசாமி கையில் ரத்த காயம் ஏற்பட்டு பதற்றத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

பின்னர் அவரை அவரது மனைவி கைத்தாங்கலாக அழைத்துச் சென்‌று வீட்டில் படுக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பழனிசாமியின் மனைவி யசோதா குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சண்முகம், அவரது தந்தை குப்புசாமி, தாயார் வள்ளியம்மாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நிலத்தில் முள் போட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பினால் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி இறந்த சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்‌தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...