கோவை மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி காவலர் குறைதீர்க்கும் முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைானத்தில் உள்ள மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் நேற்று மே.29 நடைபெற்றது.



இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த முகாமில் குடும்பபிரச்சினை, பணப்பரிமாற்ற பிரச்சினை, இடப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 79 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 1 மனு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் புகார் ஏற்பு மனு வழங்கப்பட்டது. 67 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டும் தீர்வு காணப்பட்டது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்த பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...