கோவையில் மீண்டும் தாய் யானையுடன் இணைந்த குட்டிச் சுட்டி யானை..!

தாய் யானையை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.


Coimbatore: கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட அடிவார சரக பகுதியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடன் சுறுசுறுப்பாகவும் உணவருந்தி வருகிறது. 3 நாட்களாக உடன் இருந்த குட்டி ஆண் யானை நேற்று (01-06-2024) அதிகாலை தாயை விட்டு, பிரிந்து தனது சகோதர குட்டி யானையுடன் சென்றது. 

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் அதன் கூட்டத்துடன் இணைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் குட்டி யானை அடங்கிய யானை கூட்டம் (3 ஆண் யானை 2 பெண் யானை 1 ஐந்து வயது யானை மற்றும் ஒரு குட்டி) தாயை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...