சோலையாறு அணையின் நீர்மட்டம் 38.75 அடியாக உயர்வு – நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும். இதனால் மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே முதல் வாரத்தில் வெறும் 3 அடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும். இதனால், மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...