கோவை மாவட்டத்தில் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அறிவுரை

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 15,909 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பட்டனர்.

இந்நிலையில், 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வரால் கடந்த மார்ச் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...