திருப்பூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு - 45,885 பேர் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு. 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது, கண்காணிப்பு மற்றும் அதிகாரிகள் மொபைல் டீம், பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடக்கிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி 4 தேர்வை, 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



காலை 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது என்பதால், தேர்வாளர்கள் 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அனுமதிப்பதற்கு முன்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், பர்ஸ் ஆகியவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் உடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்த பின்னரே தேர்வு மையத்திற்கு பட்டனர். ஒன்பது 30 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஐந்து நிமிட இடைவெளிக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு எழுத துவங்கினர்.



தேர்வுமைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அனைத்து தேர்வு மையங்களும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...