கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான இடத்தை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

கோவையில் நடக்க உள்ள திமுகவின் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான இடம் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது


கோவை: கோவையில் திமுக சார்பில் வருகிற 14-6-2024, அன்று, நடைபெற உள்ள, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40/40 மாபெரும் வெற்றியைப் பெற்றமைக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைந்து, திமுக சார்பில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழாவாக நடத்தப்படும் இடத்தை, இன்று 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.00 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், L&T பைபாஸ் சாலையில் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், ஆர்.மணிகண்டன், ஒருங்கிணைந்த கோவைமாவட்ட திமுகவிற்கு உட்பட்டகழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...