கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பது தகர்க்கப்பட்டது - கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு.க.ஸ்டாலின் பெரும் முன்னெடுப்பு எடுத்தார். இதன் விளைவாகவே பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என சொல்லி வந்தது தகர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.


கோவை: திமுக நடத்தும் முப்பெரும் விழா கோவையில் வரும் ஜூன் 15ஆம் தேதி மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று ஜூன்.10 அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் வரலாற்று வெற்றி பெற்றது. நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 40க்கு 40 வென்றுள்ளது.



இதற்கு முழு காரணமாக இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது.



இந்த பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார்.



அப்போது பேசிய அவர், இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு.க.ஸ்டாலின் பெரும் முன்னெடுப்பு எடுத்ததாக தெரிவித்தார். இதன் விளைவாகவே பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது என்றார்.

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என அவர்கள் சொல்லி வந்தது தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், மக்கள் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து மாபெரும் வெற்றி அடைய செய்தது இதற்கு உதாரணம் என்றார். தமிழக மக்களுக்கும், கொங்கு மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்றார். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகனங்களை சீராக நிறுத்தும் வகையிலும், முப்பெரும் விழாவிற்கு வரும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், தொண்டர்கள் செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...