அா்த்தநாரிபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அா்த்தநாரிபாளையத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (64), விவசாயி. இவா், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று ஜூன்.10 தீா்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.குலசேகரன் அளித்த தீா்ப்பில், பெருமாளுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும், மூன்றாவது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...