கோவை புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


கோவை: கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்கியது.



அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும், பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய

பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe.ac.in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ளலாம்.



கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர், மட்டுமே வர வேண்டும். சேர்க்கை கிடைத்தவுடன், அன்றே கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...