கோவையில் 5வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் இலவச சேர்க்கை – ஆட்சியர் அறிவிப்பு

பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 12, உயர்நிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளிகள் 2 என மொத்தம் 15 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 11, நடுநிலைப் பள்ளிகள் 2, உயர்நிலைப் பள்ளி 2, மேல்நிலைப் பள்ளிகள் 1 என மொத்தம் 16 பள்ளிகளும் உள்ளன.

தற்போது இப்பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்று கல்வி உதவித்தொகை, இலவசநோட்டு புத்தகம், புத்தகப்பை, மிதிவண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...