கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி – ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஷொரணூா்-கோவை ரயில் (எண்:06458) ஜூன் 14-இல் ஷொரணூா்-போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-ஷொரணூா் ரயில் (எண்: 06459) போத்தனூா்-ஷொரணூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-கோவை ரயில் (எண்: 06817) மேட்டுப்பாளையம்-வடகோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை-மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06010) வடகோவை-மேட்டுப்பாளையம் இடையே மட்டும் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) ஜூன் 14 -ஆம் தேதி கோவை நிலையத்துக்கு வருவது தவிர்க்கப்படும். மாற்றாக, இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...