பல்லடம் அருகே கரைப்புதூரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அதிர்ச்சி

அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியான கரைபுதூரில், வினியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை தூய்மைப்படுத்த அரசு போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் என்ற பகுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் இணைப்பு குழாய்களில் இருந்து விதவிதமான கலரில் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரைப்புதூர், டி.கே.டி போன்ற பகுதிகள் அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியாகும். இந்த டையிங்களால் பல நாட்களாகவே இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுவிட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்கள் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் பெற்றபோது கருப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற பல்வேறு கலர்களில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.



இந்தசம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நிலத்தடி நீரை முற்றிலும் பாதுகாக்கவும், கெட்டுப்போன நீரை தூய்மைப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...