வடவள்ளி குறிஞ்சி நகரில் பைனான்சியர் வீட்டில் கொள்ளை - காவல்துறை விசாரணை

குறிஞ்சி நகரில் பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து பத்து பவுன் நகை மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (70). பைனான்சியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி ஒருவர் எகிப்து நாட்டிலும், மற்றொருவர் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். சுந்தரம் அவரது மனைவி பெரிய நாயகியுடன் ஐ.ஓ.பி .காலனி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி பெரியநாயகி உடன் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று ஜூன்.17 இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 10 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்டிருந்தது. வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் இரவில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும் சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். பின்னர் இதுகுறித்து பெரியநாயகி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...