மாஞ்சோலை எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு கைப்பற்ற வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

வால்பாறையில் மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், வெளியேற்றப்படுமாயின் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை எஸ்டேட் விவாகரத்தில் பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை கண்டித்து தமிழக அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் பி பி டி சி நிர்வாகம் தொழிலாளர்களை எஸ்டேட் இருந்து வெளியேற்றினால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

தேயிலைத் தோட்டத் தொழில் நலிவடைந்து வருவதாகவும் தேயிலை தோட்டத்தில் பணியாற்ற போதுமான தொழிலாளர்கள் இல்லாமல் உள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதால் தொழிலாளர்கள் மாற்று வேலை தேடி வெளிப்பகுதிக்கு செல்வதாகவும் உள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்வு காண 99 வருடம் லீஸ் முடிவடைந்த எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு கைப்பற்றி தொழிலாளர்களுக்கு குறைந்தது 5 ஏக்கர் நிலத்தை வழங்கி மாற்றுத் தொழில் ஏற்படுத்தி தர வேண்டும் 99 வருடம் லீஸ் முடிவடையாத எஸ்டேட்டுகளை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தும் வண்ணமாக மாட்டுப்பண்ணை காய்கறிகள் பழம் வகைகள் பயிர் இடுவதற்கு இடம் வழங்கிய சுற்றுலா மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் எஸ்டேட் நிர்வாகத்திடம் பழைய ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களை ஷேர் ஹோல்டராக மாற்றி எஸ்டேட்ட நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதில் மாஞ்சோலை எஸ்டேட் 2028 ஆம் ஆண்டு அதன் 99 லீஸ் அக்ரிமெண்ட் முடிவடைவதாகவும் அதற்குள்ளாக pptc நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி எஸ்டேட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் தெரிகிறது. தமிழக அரசு எஸ்டேட்டை கைப்பற்றி தேயிலைத் தோட்ட தொழிலையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றம் அங்கு பணிபுரிந்த மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கி எஸ்டேட்டை தேயிலை தோட்ட தொழிலை மேன்மைப்படுத்த வேண்டும் என்றும் பி பி டி சி நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினால் புதிய தமிழக கட்சி சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பேட்டியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...