கோவையில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த சிராஜூதீனியிடம் இரிடியம் வாங்கித்தருவதாக கூறி 11 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கானை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (44) தொழில் அதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (43) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூ.11 கோடி வாங்கினார். அதன்பிறகு அவர் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சிராஜுதீன் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காமல், இரிடியமும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் சிராஜுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையால் அதிர்ச்சி அடைந்த பெரோஸ் கான், தொழிலதிபர் சிராஜுதீனிடம் சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் தருவதாகவும், மீதி தொகையை படிப்படியாக திருப்பி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்மீது காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதை சிராஜுதீன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பெரோஸ்கான் நெல்லை, பழைய செட்டி குளத்தைச் சேர்ந்த ராஜ் நாராயணன் (48), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, நடுத்தெருவை சேர்ந்த பொன் முருகானந்தம் என்ற பொன்னு குட்டி (56) ஆகியோரை அணுகி உள்ளார். அவர்களிடம் ரூ.50 லட்சம் தருவதாகவும் தொழிலதிபர் சிராஜுதீனை மிரட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு வந்து முதற்கட்டமாக ரூ.20 லட்சம் வாங்கினர். பின்னர் அவர்கள் காரில் சென்னை நோக்கி செல்ல முயன்றனர். இதுகுறித்து மாநகர போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஜூன்.18 ஈடுபட்டனர். அப்போது பணத்துடன் சென்னை செல்ல முயன்ற ராஜ் நாராயணன், பொன் முருகானந்தம் மற்றும் கார் டிரைவர் நாங்குநேரி களக்காட்டைச் சேர்ந்த ஞான பாலாஜி (வயது 35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள பெரோஸ்கானை போலீசார் தற்போது தேடி வருகிறார்கள்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் வருமானத்துறை அதிகாரிகள் பெரோஸ்கான் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...