கோவையில் 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்களை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கோவையில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சி.ஜி.டி கல்லூரி, கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் புதிய பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டு, பாலகிருஷ்ணன் அவற்றை தொடங்கி வைத்துள்ளார்.


கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரகாக கோவை மாநகர் உள்ளது. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் போக, 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலைகளும், 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலைகளும் மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலைகளும் உள்ளன.

போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாதசாரிகள் சுலபமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பதற்காக அவர்களே உபயோகித்துக் கொள்ளும் வகையில் பெலிக்கான் போக்குவரத்து சிக்னல்களை கோவை மாநகர போலீசார் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம், பார்க்கேட், 100 அடி சாலையில் 1வது வீதி, சுங்கம் சந்திப்பு, வரதராஜா மில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கணபதி மூன்றாம் எண் பேருந்து நிறுத்தம், துடியலூர் மற்றும் புரூக்பீல்ஸ் மால் அருகில் என 9 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள்ள் நிறுவப்பட்டுள்ளன.



இதனிடயே அவினாசி சாலையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அருகே, சி.ஜ.டி, கல்லூரி அருகே மற்றும் கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டன. இவற்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று ஜூன்.20 தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...