அருந்ததி ராய் மீதான உபா வழக்கை ரத்து செய்யக்கோரி உக்கடத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம்

எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, உக்கடத்தில் அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சேகா் அண்ணாதுரை, புரட்சிகர இளைஞா் கழகத்தின் பெரோஸ்பாபு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் பிலோமினா, ஆதித்தமிழா் பேரவையின் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினா்.

இதில், வழக்குரைஞா்கள் மலரவன், லூயிஸ் கே.தாமஸ், சுயமரியாதை திராவிடா் கழகத்தின் நேருதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...