கோவையில் தூய்மை பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்

கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினார்.


கோவை: கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடி உள்ளார். பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் தான் பதவியேற்ற நாள் முதல் தூய்மை பணியாளர்களின் மீது அன்பும் அக்கறையுடன் நடந்து கொள்ளும் இவர், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று வருவதாக அங்கு பணிபும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கேக் வெட்டிய நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் பணிகள் குழு தலைவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது கழக பொது குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...