கோவை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ஆரம்பப் பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்கா முத்தூர் சாலை, செல்வபுரம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவியர்களிடம் பாடத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும், அப்பள்ளிகளில் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம் சாரமேடு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியினையும், வடக்கு மண்டலம் வார்டு எண் 3-அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியினையும் மற்றும் வார்டு எண்.28க்குட்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சுவைத்து பார்த்தார்.



மேலும், வடக்கு மண்டலம் வார்டு எண் 10 சரவணம்பட்டி மோக்ஷ க்ருஹா எரியூட்டு மயான வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



முன்னதாக, மத்திய மண்டலம் நஞ்சப்பா சாலை பகுதியில், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட நவீன மர அறுவை இயந்திரத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமரன், கவிதா, கண்ணகிஜோதிபாசு, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.ஆர்.ஐ.பம்ஸ் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...