மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்:

1. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும்.

2. அரசு ஊழியர்களைப் போல் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்க வேண்டும்.

3. 2013 ஒப்பந்த உயர்வு 40% மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

4. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

5. 2016 ஒப்பந்தப்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் STERBS உடனடியாக வழங்க வேண்டும்.

6. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் குடும்ப வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.



இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...