கோவையில் தொலைந்த, திருடுபோன 168 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாநகர காவல் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட 168 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போதுவரை 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூலை 6 அன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், உரியவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகரில் தொலைந்த மற்றும் திருடுபோன 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கைப்பேசிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு பேசி நேரிலும், கூரியர் மூலமும் போலீஸார் கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இன்னும் 200 கைப்பேசிகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. கைப்பேசி பறிப்பு தொடர்பாக நடப்பாண்டில் தற்போதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...