கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து

கோவையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசினார். அயோத்தி, சித்ரகூடத்தில் பாஜக தோல்வி குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வில் ஹிந்தி திணிப்பு குறித்தும் விமர்சித்தார்.


Coimbatore: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு மற்றும் இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்தார். "ராமர் பிறந்த அயோத்தியிலும், வனவாசம் சென்ற சித்ரகூடத்திலும் பாஜக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்," என்றார் அவர்.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ தேர்வு அறிவிப்புகளில் ஹிந்தி மொழி பாடத்திற்கு 10% மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருப்பதை விமர்சித்த அவர், "இது ஹிந்தி அல்லாத மாநில மாணவர்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்கள் மற்றும் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி," என்றார். மேலும், இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் அடக்கப்படுவதையும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். "140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, தமிழகத்தின் ரயில் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டினார். "வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு மிகக் குறைவான முதலீடுகளே செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...