கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கோரிக்கை.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் இன்று ஜூலை 8 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: "கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம். ஆனால் இப்போது தான் திமுகவுக்கு அவரைப் பற்றி தெரியவந்துள்ளது. மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்."

"மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். அவர் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை விசாரிக்க வேண்டும். மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் எனவே ஆணையர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்," என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காவது பார்த்தது உண்டா? என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்ற முழு விவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...