கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மளிகைக் கடை உரிமையாளர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குணசேகரன் என்ற மளிகைக் கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். மகள் காதல் திருமணம் செய்து பணம், நகைகளை எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இச்சம்பவம் நடந்தது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் லோகநாதபுரம் முதலியார் வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகளும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மகனும் உள்ளனர். புவனேஸ்வரி கோவையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி சுற்றுலா செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய புவனேஸ்வரி, 18ஆம் தேதி நவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும், வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், குணசேகரன் தனது மனைவி மற்றும் மகனுடன் ஜூலை 8 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், "எனது மகள் எடுத்துச் சென்ற 5 லட்சம் ரூபாய், 4 பவுன் தங்க நகை மற்றும் கடை விற்பனை மூலம் வங்கிக்குச் சென்ற G-pay தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளேன்" என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...